News June 25, 2024
‘P’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

‘P’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் வசீகரமானவர்களாகவும், நகைச்சுவை தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கலை உணர்வு, படைப்பாற்றல் & கற்பனைத்திறன் மிக்க நபர்களாக இருப்பார்கள் என்றும், அதேநேரம், அவர்கள் ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ‘P’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் நண்பர்கள் & குடும்ப உறுப்பினர்களுக்கு இதை பகிருங்கள்.
Similar News
News January 2, 2026
₹25,000 சம்பளம்.. மத்திய அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் உள்ளிட்ட 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, B.Sc., வயது வரம்பு: 18 – 26. சம்பளம்: ₹25,000 – ₹1,05,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.9. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News January 2, 2026
கொரோனா பாதிப்பு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பருவகால நோய்களில் ஒன்றாக கொரோனா உருமாறியுள்ளது. TN-ல் செப். மாதம் முதல் தற்போது வரை காய்ச்சல், வறட்டு இருமல் உள்ளிட்டவைகளால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு காய்ச்சல் சரியானாலும், 4 – 8 வாரங்கள் வரை வறட்டு இருமல் நீடிக்கிறது. இது, உருமாறிய கொரோனா ஏற்படுத்திய தாக்கம்தான். தொடர் சிகிச்சைக்குப் பின் படிப்படியாக குணமாகும் என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என DPH கூறியுள்ளது.
News January 2, 2026
பிராந்திய மொழிகளை கற்க வேண்டும்: மோகன் பகவத்

குறைந்தபட்சம் நம் வீடுகளிலாவது தாய்மொழியில் பேச வேண்டும் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் அங்குள்ள பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் தான் என குறிப்பிட்ட அவர், அவை அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்றார்.


