News October 20, 2024
பால் குடிப்பவரா நீங்கள்? இதை படிங்க

பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். 1) பாலில் கால்சியம், வைட்டமின் டி சத்து இருப்பதால் எலும்பு வலுப்படும் 2) உயர்தர புரொட்டின், அமினோ ஆசிட்ஸ் இருப்பதால் தசைகள் வேகமாக வளரும், தசைகளில் பிரச்னை இருப்பின் சரியாகும் 3) பாலில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதை குடிப்பது இதய நலனை மேம்படுத்தும் 4) பாலில் இருக்கும் லைனோசிட் ஆசிட் உடல் எடையை பராமரிக்க உதவும்.
Similar News
News July 5, 2025
இன்று நிலநடுக்கம், சுனாமி பீதியில் ஜப்பான் மக்கள்!

புதிய பாபா வாங்கா என அழைக்கப்படும் ரியோ தாட்சுகியின் கணிப்பால் ஜப்பான் மக்கள் இன்று பீதியில் ஆழ்ந்துள்ளனர். 2025 ஜூலை 5-ம் தேதி ஜப்பானில் சுனாமி வரும் என 2021-ம் ஆண்டிலேயே அவர் கணித்திருந்தார். இதனிடையே, ஜப்பானின் டொகாரா தீவில் கடந்த வாரம் 900 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாட்சுவின் கணிப்பு நடக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பான் அரசு இதனை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.
News July 5, 2025
ஜூலை 5, 1950… அன்று தொடங்கிய சகாப்தம்!

இன்றைக்கு எந்த நொடியிலும் உலகில் என்ன நடக்கிறது என்பதை 24*7 லைவ் செய்திகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இதற்கெல்லாம் தொடக்கம் 1950-ல் இதே நாளில் 20 நிமிடங்கள் ஓடிய முதல் செய்தி ப்ரோக்ராமை BBC ஒளிபரப்பியதுதான். இதனை தொடர்ந்துதான் பல செய்தி நிறுவனங்கள் தினசரி செய்தி தொகுப்பை டிவியில் கொண்டு வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு 24 மணி நேரமும் லைவ் செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது.
News July 5, 2025
முதல் பெண் ‘போர் விமானி’ ஆனார் ஆஸ்தா புனியா!

இந்திய கடற்படை போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தேர்வாகி சாதனை புரிந்துள்ளார். ‘தங்கச் சிறகுகள்’ விருதையும் அவர் பெற்றார். ஏற்கெனவே, கடல்சார் ரோந்து விமானங்கள் & ஹெலிகாப்டர்களின் விமானிகளாக பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புனிதா போர் விமானியாக பொறுப்பேற்றதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.