News October 26, 2024
தனிமையில் இருப்பதை விரும்புபவரா நீங்கள்?

தனிமையில் இருப்பது, மனச்சோர்வு & மன இறுக்கப் பாதிப்பை 30% அதிகப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. USA உளவியல் சங்கம் உலகளவில் 6 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாமல் இருப்பவர்களின் மனநலனை கடுமையாக பாதிப்படைகிறது என்றும் அவர்களில் 29% பேர் அல்சைமர், 15% அறிவாற்றல் குறைபாடு பாதிப்புறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
News July 9, 2025
நான் கைதாகவில்லை: சௌபின் சாஹிர் விளக்கம்

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடியை கடனாக பெற்றுக்கொண்டு அசல் தொகையோ, 40% லாபத்தையோ <<16994564>>சௌபின் சாஹிர்<<>> தராததால் அவர் கைதாகி சொந்த ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய சௌபின் சாஹிர், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும், தன் பக்கம் நியாயங்களை உணர்த்தும் வகையிலான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, நீதிமன்றத்திடம் சமர்த்திருக்கிறேன், விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.
News July 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 390 ▶குறள்: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. ▶ பொருள்: கொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.