News April 2, 2025
உங்களுக்கு 40 வயது ஆகிறதா?

40 வயதானவர்களின் எலும்புகள் அடர்த்தியை இழந்து தேய்மானம் அடைகின்றன. எனவே முதுமை வரை வலிமையான எலும்பை பெற பால், தயிர், கீரைகள், பாதாம், மீன், முட்டை மஞ்சள் கருக்கள் என கால்சியம், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நடைபயிற்சி, ரன்னிங் மேற்கொள்ளுங்கள். புரதம் நிறைந்த இறைச்சி, முட்டை, பீன்ஸ், பயறு மற்றும் நட்ஸ் வகைகளை உட்கொள்ளுங்கள். புகைப்பிடித்தல், மதுபழக்கத்தை கைவிடுங்கள்.
Similar News
News September 17, 2025
பிரதமர் மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடி, தொடர்ந்து 11 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். அவரது மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடிப்படை ஊதியம்(₹50,000), பார்லிமெண்ட் அலவன்ஸ்(₹45,000), தினசரி அலவன்ஸ்(₹2,000), இதர செலவுகளுக்கான அலவன்ஸ் (₹3,000) உடன் மாத சம்பளமாக, அவர் ₹1.66 லட்சம் பெறுகிறார். மேலும், ஆடம்பரமான அரசு பங்களா, SPG கமாண்டோ பாதுகாப்பு, சிறப்பு விமானம் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.
News September 17, 2025
வசூலை அள்ளிய பட்ஜெட் படங்கள்

சமீப காலமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எதிர்பாராத விதமாக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் எந்தெந்த குறைந்த பட்ஜெட் படங்கள், எவ்வளவு வசூலை அள்ளியது என்பது மேலே போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதை தவிர வேறு ஏதேனும் படம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
தமிழகத்துக்கு கூடுதலாக 350 MBBS இடங்கள்

தமிழகத்திற்கு கூடுதலாக 350 MBBS இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், TN-ல் 7 தனியார் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் என மொத்தம் 350 இடங்கள் அதிகரித்துள்ளன. இந்தியளவில் 6,850 இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த MBBS இடங்கள் எண்ணிக்கை 1,23,700ஆக உயர்ந்துள்ளது.