News March 13, 2025
மகளிர் உரிமைத் தொகை உயருகிறதா?

மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 14, 2025
கும்பகோணம் தனி மாவட்டமாகுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் கும்பகோணம் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தஞ்சை மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.
News March 14, 2025
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ₹3 லட்சம் நிவாரணம்

சேலத்தில் பணியின்போது தண்ணீர் தொட்டியின் மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சுப்ரமணி (55) என்பவரது குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து சுப்ரமணியின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
News March 14, 2025
200% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரியை டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.