News March 28, 2024
ஓட்டுப்போட மட்டும் தான் பெண்களா?

மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகள் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை முறையாக தரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக 3 பெண் வேட்பாளர்களையும், 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக 1 பெண் வேட்பாளரையும், 24 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக 3 பெண் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இதில் எந்த கட்சியுமே 33% ஒதுக்கீட்டை பெண்களுக்கு தரவில்லை என்பதே வருத்தமான உண்மையாகும்.
Similar News
News March 6, 2026
CINEMA 360: மார்ச் 9-ல் ‘ஜன நாயகன்’ ரிவ்யூ!

*வரும் மார்ச் 9-ம் தேதி ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி பார்க்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது *ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெய், சுராஜ் ஆகியோரின் நடிப்பில் ‘டெக்ஸ்லா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் * துரந்தர் 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது *சுமார் ₹31.5 கோடி மதிப்பில் சென்னை போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா வீடு வாங்கியுள்ளாராம்
News March 6, 2026
மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு பின்னடைவு

மேகதாது அணைக்கு எதிராக SC-ல் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இது கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி என்று, பட்ஜெட் உரையில் அம்மாநில CM சித்தராமையா கூறியிருக்கிறார். அத்துடன், இத்திட்டம் தொடர்பாக புதிய திருத்தப்பட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் எனவும், விரைவில் அது மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
News March 6, 2026
மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் புதிய அறிவிப்பு

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் & சில வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் KN நேரு கூறியுள்ளார். கடந்த தேர்தலில் இங்குதான் மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு வெளியானது, இம்முறையும் உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு, நிதி நிலைமைக்கு ஏற்ப தகுந்த அறிவிப்புகள் மகளிருக்கு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.


