News September 26, 2025
மனைவிகள் வாடகைக்கா? என்னங்க சொல்றீங்க!

வீடுகளை, பைக்குகளை வாடகைக்கு எடுப்பது போல மனைவிகளை வாடகைக்கு கொடுக்கும் பழக்கம் மத்திய பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் இருக்கிறது. மனைவி தேவைப்படுவோர் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதனை அப்பெண்களின் தகப்பன் அல்லது கணவனேதான் செய்கின்றனர் என்பது அடுத்த வேதனை. இப்படி ஏதாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா?
Similar News
News January 10, 2026
பொங்கல் பணம்.. கடைசி நேரத்தில் சிக்கல்

புதுச்சேரியில் பொங்கல் பரிசு ₹4000 வழங்க, CM ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க சுமார் ₹140 கோடியை ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போதிய நிதி இல்லை என கூறி அதிகாரிகள் அந்த கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பொங்கல் பணம் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News January 10, 2026
‘முதல்ல சுடுவோம்.. அப்புறம் தான் பேசுவோம்’

கிரீன்லாந்தை தரவில்லை என்றால் அதை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வோம் என <<18770910>>டிரம்ப்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், கிரீன்லாந்துக்குள் USA வீரர்கள் நுழைந்தால் முதலில் துப்பாக்கிசூடு தான் நடத்துவோம், பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என டென்மார்க் எச்சரித்துள்ளது. இதனால், கிரீன்லாந்தை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுத்து டென்மார்க்கிலிருந்து பிரிந்து USA-ல் இணைத்துக்கொள்ள டிரம்ப் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
News January 10, 2026
ரூட்டை மாத்துகிறாரா ராமதாஸ்?

<<18806660>>ஸ்டாலினின் ஆட்சி நன்றாகதான்<<>> உள்ளது என நேற்று ராமதாஸ் பேசியுள்ளது கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். கடந்த 29-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற செயற்குழுவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும் என ஸ்ரீகாந்தி பேசினார். ஆனால், அன்புமணி, அதிமுகவுடன் கைகோர்த்ததால் அதற்கு எதிரான அணியில் இணைய ராமதாஸ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


