News December 6, 2024

பிரிவினை கட்சியா நாம் தமிழர்?

image

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் நிகழ்ச்சி ஒன்றில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத கட்சி என்று பேசினார். இது, சீமான் மற்றும் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி குறித்து இவ்வாறு பேசியிருப்பது அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் தமிழர் குறித்து உங்களது கருத்து என்ன?

Similar News

News December 4, 2025

Sports 360°: குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்

image

*மகளிர் ஜூனியர் WC ஹாக்கியில், இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி *ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆஷிஸ் லிமாயே தங்கம் வென்றார் *அதேபோல, ஈவென்டிங் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது *ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்-ல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார். *ஐசிசி ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்.

News December 4, 2025

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

image

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.

News December 4, 2025

அதிபர் புடின் இன்று இந்தியா வருகை

image

அரசு முறைப் பயணமாக அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார். புடினின் இந்த பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான <<18461190>>வர்த்தகம், பொருளாதாரம்<<>> குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதையடுத்து, டிச.5-ல் நடக்கும் 23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் PM மோடி, புடின் பங்கேற்கின்றனர். முன்னதாக, PM மோடி புடினுக்கு சிறப்பு விருந்தளிக்கவுள்ளார். புடின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!