News October 22, 2025
இந்தியா மீதான USA வரி குறைகிறதா?

இந்தியா – USA இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதன் படி, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் தற்போதுள்ள 50% இலிருந்து 15–16% ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, USA-ன் சோளம் & சோயா உணவுப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 22, 2025
சூப்பர் மாரி.. வாழ்த்திய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், மாரி செல்வராஜுக்கு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று ரஜினி கூறியதாக மாரி, தனது X பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
News October 22, 2025
அழுதது நடிப்பா? அன்பில் மகேஸ் விளக்கம்

கரூர் துயரின்போது அன்பில் மகேஸ் அழுதது ட்ரோல் ஆனது. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், உணர்ச்சிகளும் அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும் என்றார். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றினால் விலங்குக்கு சமம், அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றினால் மரத்திற்கு சமம் என வள்ளுவர் கூறியதை எடுத்துரைத்தார். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதர், ஒரு மனிதனாக மாற மறந்துவிட்டான் என்றார்.
News October 22, 2025
LGBTIQ என்றால் என்ன? Explained

ஆண், பெண் என்ற இரு பாலினத்தை தாண்டி சமூகத்தில் மூன்றாம் பாலினமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் குறிப்பிட்ட சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைதவிர, LGBTIQ என்ற பிரிவிலும் உலகளவில் மக்கள் உள்ளனர். இந்த LGBTIQ என்றால் என்ன, அவர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றனர், அவர்களுக்கான பாலியல் விருப்பம் என்னவென்பதை மேலே swipe செய்து பாருங்கள்.