News September 4, 2025

டிவி, ஏசி விலை ₹23,000 வரை குறையும்

image

28%-ஆக இருந்த GST வரி, 18% ஆக குறைந்த நிலையில் டிவி, AC, டிஷ் வாஷர் உள்ளிட்டவையில் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, 43 இன்ச் டிவி ₹2,000-வரையிலும், 75 இன்ச் டிவி ₹23,000-வரையிலும் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் AC, டிஷ் வாஷர் உள்ளிட்டவையின் விலை ₹3,500 முதல் ₹4,500 வரை குறையும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல் <<17607483>>கார் பைக்குகளின்<<>> விலையும் குறைகிறது.

Similar News

News September 6, 2025

முடி கருகருன்னு அடர்த்தியா வளர இந்த எண்ணெய் போதும்

image

நோயில்லாத வாழ்க்கைக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். SHARE.

News September 6, 2025

PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

image

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

நாளை சந்திர கிரகணம்.. பண மழை கொட்டும் 4 ராசிகள்

image

நாளை (செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். *மேஷம்: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சொத்து பிரச்னை தீரும். *ரிஷபம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும்.(ஆனால் கவனம் தேவை). *கன்னி: தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். வாழ்வின் தடைகள் நீங்கும். *தனுசு: திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி சிக்கல் தீரும்.

error: Content is protected !!