News August 5, 2025
இந்த அறிகுறிகள் இருக்கா? எச்சரிக்கை!

ஆண்களிடையே புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 40 வயதை தொட்டவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் போகையில் முடிக்கையில் வலி & அசவுகரியம், முதுகு வலி, சிறுநீர் (அ) விந்தில் ரத்தம், திடீர் உடல் எடைக் குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை ஆலோசியுங்கள். SHARE IT
Similar News
News January 18, 2026
வம்பிழுத்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சூரி

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரி, DCM உதயநிதிக்கு காளை சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதற்கு நெட்டிசன் ஒருவர், சூரியை திமுகவுடன் இணைத்து, ‘இனி சூரியும் ₹200 கொத்தடிமை. தவெகவை மீறி அடுத்த படம் எப்படி ரிலீஸ் செய்யப்போகிறாரோ?’ என்ற கேலி செய்தார். இதற்கு சூரி, ‘இங்கு கதை தான் கிங், அது நன்றாக இருந்தால் வெற்றி தான்’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
News January 18, 2026
சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி மற்றும் 3-வது ODI போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. நியூசிலாந்து எதிராக ODI தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோற்றதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ODI போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை இந்திய அணி என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
News January 18, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 18, தை 4 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


