News March 4, 2025
இத்தனை கொடூர மனிதர்களா? மோடி ஆவேசம்

குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடி, இன்று வந்தாராவில் உள்ள விலங்குகள் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றும் பாகன்களால் சித்ரவதைக்கு உள்ளான யானைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், மனிதர்களால் எப்படி இவ்வளவு கொடூரமாக நடக்க முடிகிறது? இதற்கு நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2025
‘பேட் கேர்ள்’ டீசர் நீக்கப்படுமா?

‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கில் மத்திய அரசு, கூகுள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டீசரில் சிறுவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதை நீக்க கோரி, 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படம், சமூக எதார்த்தங்களை பதிவு செய்துள்ளதாக பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.
News March 5, 2025
இன்றைய (மார்ச்.05) நல்ல நேரம்

▶மார்ச்- 05 ▶மாசி – 21 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶நட்சத்திரம் : பரணி.
News March 5, 2025
டிரம்ப் வைத்த செக்.. பணிந்த ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஒப்புக்கொண்டால் முதற்கட்டமாக கைதிகளை பரிமாறுவது, வான் வழி, கடல் வழி போரை நிறுத்த தாங்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு அடம்பிடித்து வந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கான ராணுவ நிதியை டிரம்ப் நேற்று நிறுத்தியதும், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.