News October 28, 2025
இந்த 3 அறிகுறிகள் இருக்கா? சுகர் Confirm!

இந்த 3 அறிகுறிகள் இருந்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை நோய் வரலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். 1. கழுத்தை சுற்றி அளவுக்கு அதிகமாக கருமையாக இருத்தல் 2. கண்களுக்கு மேல், கழுத்தில் Warts எனப்படும் மருக்கள் வந்தால் 3. தொப்பை போட்டால் சுகர் வரும் ரிஸ்க் இருக்கிறதாம். இதனை சரி செய்ய நல்ல உணவும், உடற்பயிற்சியும் தேவை. அத்துடன் டாக்டரை அணுகுவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE THIS.
Similar News
News October 28, 2025
ஓய்வு பெறுகிறாரா மெஸ்ஸி?

கால்பந்து உலகின் அரசன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், 2026 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக அவரே தெரிவித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், உடற்தகுதி இருந்தால் மட்டுமே பங்கேற்பேன் எனவும் கூறியுள்ளார். தற்போது அவர் இன்டர் மியாமி அணி சார்பாக கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 28, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(அக்.28) சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. <<18124580>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை மளமளவென சரிந்து வரும் நிலையில், நம்மூரிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இது வரும் சில நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
காஷ்மீர் மக்களுக்கு நாங்க இருக்கோம்: பாக்., PM

இந்திய ராணுவம் 1947-ல் காஷ்மீரை ஆக்கிரமித்ததாக கூறி, ஆண்டுதோறும் அக்.27-ஐ கருப்பு நாளாக பாக்., கடைப்பிடித்து வருகிறது. இதனையொட்டி PAK PM ஷெபாஸ் ஷெரீப் & PAK அதிபர் ஆசிப் அலி சர்தாரி, காஷ்மீர் மக்களையும், அவர்களின் உரிமையையும் இந்தியா நிராகரிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை எனவும், அவர்களுடன் 24 கோடி பாகிஸ்தானியர்கள் நிற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.


