News March 27, 2025

அமேசான், பிளிப்கார்ட்டில் இவ்வளவு தரமற்ற பொருட்களா?

image

முன்னணி ஈ- காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் சோதனை நடத்தியது. சென்னை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள குடோன்களில் நடந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ₹76 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

Similar News

News March 31, 2025

எனது மகனை பலிகிடா ஆக்குகின்றனர்

image

L2 எம்புரான் பட கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில், <<15942114>>மோகன்லாலுக்கு <<>>ஆதரவாக இயக்குநர் மேஜர் ரவி பதிவிட்டார். இதனால், பிருத்விராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட, அவரின் தாயார் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது மகனை பலிகிடா ஆக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். ஒரு இயக்குனராக, பிருத்விராஜ் படத்தில் தொடர்புடைய யாரையும் ஏமாற்றவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

News March 31, 2025

பாலிவுட் நடிகையை டேட் செய்யும் குமார் சங்ககாரா?

image

பிரபல கிரிக்கெட்டர் குமார் சங்ககாரா, பாலிவுட் நடிகை மலைகா அரோராவை டேட் செய்வதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இருவரும், நேற்று RR vs CSK மேட்சை ஒன்றாக அமர்ந்து மேட்ச் பார்த்ததை அடுத்து, ‘ஒருவேள இருக்குமோ?’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் மலைகா அரோரா ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

News March 31, 2025

ஒரே மாதத்தில் சவரனுக்கு ₹3,880 உயர்ந்த தங்கம்

image

சென்னையில் தங்கம் விலை இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,880 அதிகரித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையானது. பின்னர், ஜெட் வேகத்தில் அதிகரித்து 31 நாள்களில் சவரனுக்கு ₹3,880 உயர்ந்துள்ளது. <<15945454>>இன்று<<>> ₹520 உயர்ந்து புதிய உச்சமாக 1 சவரன் ₹67,400க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் 1 சவரன் ₹50,200க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!