News January 21, 2025
தமிழகத்தில் இத்தனை கோடீஸ்வரர்களா..!

தமிழகத்தில் 6,288 பேர் ₹1 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவது தெரியவந்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா (1,24,800 பேர்) முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உ.பியில் 24,050 பேரும், ம.பியில் 8,666 பேரும் ₹1 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர். தென் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
Similar News
News March 11, 2026
1960-ல் ஒரு LPG சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த 60 ஆண்டுகளில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. 1960-ல் ₹10 வரை மட்டுமே இருந்த விலை, 2026-ல் ₹928-ஐ எட்டியுள்ளது. 1990-ல் ₹120 ஆகவும், 2010-ல் ₹400 ஆகவும் இருந்த விலை, இன்று சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறிவரும் மானியக் கொள்கைகள் மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
News March 11, 2026
நாட்டை மட்டுமில்லை.. வீட்டையும் பாத்துக்கணும்: CM

TN-ல் இருந்து குடிமைப் பணிகள் (UPSC) தேர்வில் வென்ற 60 பேரை ’ரியல் ஹீரோஸ்’ என CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதற்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை மட்டுமல்ல, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், UPSC பயிற்சி பெற முன்பு டெல்லி செல்லும் நிலை இருந்ததாகவும், ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தால் அந்நிலை மாறியிருப்பதாகவும் பேசியுள்ளார்.
News March 11, 2026
திருமணத்தை மீறிய உறவு.. சிக்கிய இன்னொரு நடிகர்

கேரள அமைச்சரும், நடிகருமான KP கணேஷ்குமார், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவரின் மனைவி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து KP கணேஷ்குமார், தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற பல விஷயங்கள் வரும்; இதற்கு முன்பும் தனது வீட்டில் இருந்து பிரச்னை வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும், காதல் ஒன்றும் குற்றம் கிடையாது; தனக்கு ஒன்றல்ல, 5,000 காதல் உறவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


