News August 12, 2025
நாட்டில் இவ்வளவு ₹500 கள்ள நோட்டுகளா?

2024 – 25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், ₹500 கள்ள நோட்டுகள் 1.17 லட்சம், 200 கள்ள நோட்டுகள் ₹32 ஆயிரம், 100 நோட்டுகள் ₹51 ஆயிரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளின் தரத்தை மேம்படுத்த RBI-க்கு வலியுறுத்தி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியே இன்னும் எவ்வளவு இருக்குதோ?
Similar News
News August 13, 2025
ராசி பலன்கள் (13.08.2025)

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – லாபம் ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – தடங்கல் ➤ துலாம் – அமைதி ➤ விருச்சிகம் – பொறுமை ➤ தனுசு – அன்பு ➤ மகரம் – மகிழ்ச்சி ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்பம்.
News August 13, 2025
வாவ்! 3 நாள்களில் 343 லிட்டர் பால் கொடுத்த பசு!

பிரேசிலில் Holstein-Friesian இனத்தை சேர்ந்த பசு ஒன்று, உலக சாதனை படைத்துள்ளது. சாதாரணமாக ஒரு பசு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கறக்கையில், இது 114 லிட்டர் என்ற கணக்கில் 3 நாள்களில் 343 லிட்டர் பால் கறந்துள்ளது. இதற்கு அதன் மரபியல், ஊட்டச்சத்தான உணவு, பராமரிப்பு & நவீன தொழில்நுட்பம் ஆகியவை காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம் நாட்டில் உள்ள முர்ரா & நீலி ரவி இனங்களும் இதே அளவு பால் தரக்கூடியவை.
News August 13, 2025
நீங்க இதை செய்றீங்களா? உடனே நிறுத்துங்க!

நீங்கள் தினமும் சாதாரணமாக செய்யும் சில விஷயங்கள் உங்கள் உடல்நலத்துக்கு எவ்வளவு கேடாக மாறலாம் தெரியுமா? சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை பாதிக்கும். தலையணைக்கு கீழே போன் வைத்து தூங்குவது தூக்கத்தை பாதிக்கும். நீண்டநேரம் நின்றுகொண்டிருப்பது ரத்தம் உறைதல் ஆபத்தை ஏற்படுத்தலாம். மிகவும் சூடாக சாப்பிடுவது உணவுக்குழாய் கேன்சருக்கு காரணமாகலாம். காது குடைவதால் கேட்கும் திறன் பாதிக்கலாம். உஷார்!