News August 8, 2024

மகளிர் உதவித்தொகைக்கு மட்டும் நிதி இருக்கா?

image

நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தர நிதி இல்லை, மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு நிதி இருக்கிறதா என மஹாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் நிலத்தில் பாதுகாப்பு துறை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு உரிய பதில் தாக்கல் செய்யாவிட்டால், தலைமைச் செயலரை வரவழைக்க நேரிடும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.

Similar News

News November 17, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 522
▶குறள்:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
▶பொருள்: எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

News November 17, 2025

NATIONAL 360°: ஹைதராபாத்தில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் கார்

image

சூரத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் ஸ்டேஷன் பணிகளை PM மோடி ஆய்வு செய்தார். டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஹைதராபாத்தில் அதிக வெப்பமடைந்ததால் எலக்ட்ரிக் காரில் பற்றி எரிந்து தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். டெல்லியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகே அரை நிர்வாணத்துடன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

image

நீங்கள் பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, உங்களை ஒருபோதும் சுருக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களை நீங்கள் வெளிப்படுத்துவது, சுய விழிப்புணர்வின் அறிகுறிகள், சுமை அல்ல. இதேபோல், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!