News March 18, 2025
வீட்டில் குழந்தைகள் இருக்கா? அப்போது இது முக்கியம்..

கேரளாவில் 3 வயது சிறுமி டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்டை பயன்படுத்தி <<15791111>>உயிரிழந்தாள்<<>>. அதுபோல் பிளீச்சிங் தூள், சோப்பு தூள் போன்றவையும் கூட குழந்தைகளுக்கு எமனாக மாறலாம் என்பதால் அதை குழந்தைகளின் கைக்கு எட்டாத இடங்களில் வைப்பது அவசியம். அதேபோல் கத்தி, கத்தரிக்கோல், சிறிய நட்டுகள், பட்டன்கள், சில்லரை காயின்கள் போன்றவையும் அவர்களின் பார்வைக்கு படும்படி வைக்கக்கூடாது. Share it…
Similar News
News September 7, 2025
இபிஎஸ் செய்தது சரியா? கட்சிக்குள் விவாதம்

பிரிந்து சென்றவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செங்கோட்டையன் மீது இபிஎஸ் எடுத்த நடவடிக்கை அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பிடுங்கப்பட்டுள்ளது எதிர்பாராதது என்கின்றனர். என்ன இருந்தாலும் கட்சித் தலைமைக்கே கெடு வைப்பது ஏற்க முடியாதது என்று ஒருதரப்பும், நடவடிக்கைக்கு முன் விளக்கம் கேட்டிருக்கலாம் என இன்னொரு தரப்பும் கூறுகின்றனர். உங்க கருத்து?
News September 7, 2025
ஃபிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய PM

ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் PM மோடி இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் PM தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உலகில் அமைதி நிலவ இந்தியா – ஃபிரான்ஸ் ராஜதந்திரக் கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
இந்தியாவிற்கு வர மறுக்கும் PAK மகளிர் அணி

இந்தியாவில் நடைபெற உள்ள ICC மகளிர் ODI உலகக்கோப்பை தொடக்க விழாவை பாக்., மகளிர் அணி புறக்கணிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 30-ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், இத்தகைய அதிரடி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக, பாக்., விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.