News August 19, 2024

அம்மா மருந்தகங்கள் இருக்கா? இல்லையா?

image

தமிழகம் முழுவதும் 2025 பொங்கல் அன்று ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அம்மா மருந்தகம் என்று ஒரு திட்டமே இல்லை, ‘அம்மா கிளினிக்’ என்ற திட்டமே உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார். உங்கள் ஊரில் ‘அம்மா மருந்தகம்’ இருக்கா?

Similar News

News April 10, 2026

ஜன நாயகனை டவுன்லோட் செய்யாதீங்க.. கடும் எச்சரிக்கை

image

ஜன நாயகன் படத்தை SM-ல் பகிர்ந்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. சட்டவிரோதமாக படத்தை டவுன்லோட் செய்து பரப்பியவர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்தது

image

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (ஏப்.10) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹265-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று ₹5,000 குறைந்த நிலையில், இன்று ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News April 10, 2026

உதயநிதியுடன் எல்.முருகன் கூட்டு: ஆதவ் அர்ஜுனா

image

‘ஜனநாயகன்’ படத்தை உதயநிதியுடன் சேர்ந்து எல்.முருகன் முடக்கியதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதி என சாடிய அவர், விஜய்யை மிரட்டும் வகையிலும், மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் படத்தை வெளியிட்டுள்ளனர்; திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர் என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!