News April 23, 2025
கண்கள் மஞ்சளாக உள்ளதா?

கண்கள் மஞ்சளாக மாற 3 காரணங்கள் உள்ளன. 1) கல்லீரல் ரத்த சிவப்பணுக்களை உடைப்பதால், எந்தவொரு கல்லீரல் செயலிழப்பும் சிரோசிஸை ஏற்படுத்தும். இதனால் கண்கள் மஞ்சளாகும். 2) பித்த நாளங்கள் பித்தத்தை எடுத்துச் செல்ல முடியாதபோது, அது படிந்து, கண்கள் மஞ்சள் ஆகும். 3) பித்த நாளத்துடன் சேர்ந்து, கணையத்திலிருந்து வரும் குழாய் சிறுகுடலுக்கு வழிவகுக்கிறது. அது பாதிக்கப்பட்டாலும் கண்கள் மஞ்சளாகும்.
Similar News
News October 31, 2025
குழந்தைகளின் உடல்நலனுக்கு 5-2-1-0 ஃபார்முலா

குழந்தைகளின் உடல்நலனுக்கு 5-2-1-0 ஃபார்முலாவை பின்பற்றுவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.*0 என்றால் தண்ணீர் அல்லது பால் தவிர வேறு பானங்களை அருந்தக் கூடாது. *தினமும் 1 மணி நேரமாவது குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். *2 மணி நேரத்திற்கும் குறைவாக எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு. *தினமும் 5 வகையான காய்கறிகள் அல்லது பழங்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
News October 30, 2025
BREAKING: 2026 தேர்தல்.. விஜய் புதிய முடிவெடுத்தார்

கரூர் துயரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்த பிறகு, தவெகவின் அரசியல் பணிகள் வேகமெடுத்துள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுவாக்கும் நோக்கில், திமுக பாணியில் 10 மண்டலங்களாக தமிழகத்தை பிரித்து, அதற்கு பொறுப்பாளர்களை விஜய் நியமிக்க உள்ளாராம். இந்த பொறுப்பாளர்கள் பட்டியல், நவ.5-ல் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் வியூகங்கள் கைகொடுக்குமா?
News October 30, 2025
ராகுல் பிரசாரத்திற்கு தடை கோரி பாஜக மனு

வாக்குகளை பெற PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் பேசியதை கண்டித்து, பிஹார் மாநில தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்த விதிகள் மற்றும் பொது பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி பிரதமரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசியதாகவும், இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க உத்தரவிடவும் மனுவில் கூறியுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிரசாரம் செய்ய தடைவிதிக்கவும் வலியுறுத்தியுள்ளது.


