News April 11, 2024

வயதானவர்கள் வீட்டில் இருக்கிறார்களா?

image

வயதானவர்கள் தடுமாறி விழுந்தால் எலும்புகள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். எனவே அவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது, வெளிச்சம் இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும். கால் தடுமாறி பிசகிவிட்டால் நீவிவிடுவதை தவிர்க்க வேண்டும். எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால் கூட நீவிவிடுவதன் மூலம் அது அதிகமாகும்.

Similar News

News January 12, 2026

திமுக கூட்டணியில் ராமதாஸ்.. சமாதனமானாரா திருமா?

image

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க <<18830863>>ராமதாஸ்<<>> பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராமதாஸ் வந்தால் திருமா கோபித்து கொள்வாரே என்ற சங்கடம் இருந்த நிலையில், வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரை சமரசம் பேச திமுக தலைமை தூது அனுப்பியுள்ளதாம். இருப்பினும், ராமதாஸ் தரப்பு 10+ தொகுதிகளை கேட்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறதாம்.

News January 12, 2026

7 மாவட்டங்களில் கனமழை பொளக்கும்

image

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 12, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 12, மார்கழி 28 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!