News December 5, 2024
இன்னும் போன்பூத்கள் பயன்பாட்டில் இருக்கிறதா?

கடைசியாக எப்போது டெலிபோன் பூத்தை பார்த்தீங்க. கடந்த 3 வருடத்தில் 44,922 டெலிபோன் பூத்கள் மூடப்பட்டுவிட்டது. தற்போது 17,000 பூத்கள் பயன்பாட்டில் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் கூறினார். தமிழகத்தில் நகரங்களில் 2,809 PCOக்களும், கிராமங்களில் 305 PCOக்களும் இருக்கிறதாம். நீங்க கடைசியா போன் பூத்’ல பேசுனா விஷயம் நியாபகம் இருக்கா?
Similar News
News December 9, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் <<18509484>>கே.கே.செல்வம்<<>> மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால், அவரது அண்ணன் மகனான கே.கே.செல்வத்துடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், செங்கோட்டையனுக்கு அளித்த முக்கியத்துவம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், EPS முன்னிலையில் கே.கே.செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார்.
News December 9, 2025
திமுக நிர்வாகி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பவானி திமுக நகரச் செயலாளர் பா.சி.நாகராஜன் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிகழ்வுகளை பாங்குடன் ஒருங்கிணைப்பதில் நாகராஜன் ஆர்வத்துடன் செயல்பட்டவர் என்று நினைவுகூர்ந்துள்ளார். கால்நூற்றாண்டு காலம் திமுகவில் பயணித்த அவருக்கு சிறந்த நகர செயலாளர் விருது வழங்கியதையும் குறிப்பிட்டு ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார்.
News December 9, 2025
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளன. சென்செக்ஸ் நேற்று 600 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் 682 புள்ளிகள் சரிந்து 84,682 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 229 புள்ளிகள் சரிந்து 25,730 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. Shriram Finance, Asian Paints, TCS உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் 5% வரை சரிவைக் கண்டுள்ளன.


