News May 16, 2024
விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன்

உச்சபட்ச அதிகார மயக்கத்தில் மனிதாபிமானம் இல்லாமல், சட்டசபையில் CM ஸ்டாலின் பேசியதாக விஜய் விமர்சித்ததற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு செல்லாத விஜய் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 9, 2025
உங்கள் அக்கவுண்ட்டில் இத முதல்ல மாத்துங்க

சுமார் 2 பில்லியன் கணக்குகள் ஹேக்கர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஈஸியான பாஸ்வேர்டுகளை வைத்துள்ளதாக Comparitech நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ‘123456’ என்ற பாஸ்வேர்டை 76 லட்சம் பேரும், ‘admin’ என 19 லட்சம் பேரும் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்த லிஸ்ட்டில், ‘qwerty’, ‘password’, ‘India@123’ போன்ற பாஸ்வேர்டுகளும் இடம்பெற்றுள்ளன. இதை இன்றே மாற்றும்படி அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, நவ.15-க்குள் வங்கி கணக்கில் ₹2,000 செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் பணம் கிடைக்க, <


