News March 19, 2024
ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதா?

வீட்டிலிருந்து (Work From Home) வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கணினி, மடிக்கணினி & மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெல், தனது ஊழியர்களை ஹைப்ரிட் – ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஹைப்ரிட் ஊழியர்களை வாரத்தில் 3 நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 21, 2025
மசோதாவை வாசிக்க கூட நேரம் தருவதில்லை: கனிமொழி

PM, CM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதுபற்றி பேசிய கனிமொழி, எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட கால அவகாசம் தராமல், கூட்டத்தொடரின் கடைசி நாளில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக செய்வதாக குற்றம் சுமத்தினார். ஜனநாயகத்தை சீர்குலைக்க குறிக்கோளோடு மத்திய அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
News August 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 21 – ஆவணி 5 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶ கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: திதித்துவம் ▶ சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
News August 21, 2025
கர்நாடகாவை போல் TN அரசு செயல்படவில்லை: அன்புமணி

சமூகநீதியை CM ஸ்டாலின் குழித்தோண்டி புதைப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 183 நாள்களில் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசு காட்டிய வேகத்தை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் TN அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் காட்டவில்லை என அன்புமணி குற்றம்சுமத்தியுள்ளார்.