News April 24, 2024

விளம்பரங்கள் அளவுக்கு மன்னிப்பு பிரசுரிக்கப்பட்டதா?

image

விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அதே பக்கத்தில் அதே அளவுக்கு மன்னிப்பு பிரசுரிக்கப்பட்டதா என பாபா ராம்தேவ், பதஞ்சலி சிஇஓ பாலகிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. வழக்கு விசாரணையில் ராம்தேவ் சார்பில், ₹10 லட்சத்தில் 67 பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Similar News

News January 2, 2026

இந்தூரில் விநியோகிப்பட்டது விஷம்: ராகுல் காந்தி

image

<<18732273>>இந்தூர் குடிநீர்<<>> விவகாரம் தொடர்பாக ம.பி., அரசை கண்டித்துள்ள ராகுல் காந்தி, இந்தூரில் விநியோகிக்கப்பட்டது குடிநீர் அல்ல; விஷம் என்று கடுமையாக சாடியுள்ளார். வீடுதோறும் மரண ஓலம் கேட்கும் நிலையில், பாஜக அரசு ஆணவத்தை பதிலாக அளித்துள்ளதாக கூறியுள்ளார். இருமல் மருந்து, மருத்துவமனையில் எலி, குடிநீர் மாசு என ஒவ்வொரு முறை ஏழைகள் சாகும்போதும், PM மோடி வழக்கம்போல மெளனமாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

News January 2, 2026

ஆடையை கழற்றி டான்ஸ் ஆட சொன்னார்: தனுஸ்ரீ தத்தா

image

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2018 ஆம் ஆண்டு #MEE TOO மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில், ஷூட்டிங் ஒன்றில் இயக்குநர் எனது ஆடையை கழற்றிவிட்டு நடனமாடச் சொன்னதாக தனுஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை, சக நடிகர்களும் பதிலளிக்காததால், இயக்குநரும் அமைதியானார் என்றும் அவர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

News January 2, 2026

10 நிமிட மின்னல் வேக டெலிவரி பாதுகாப்பானதா?

image

10 நிமிட <<18711933>>டெலிவரியால் ஊழியர்களின்<<>> பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக SM-ல் விவாதம் எழுந்தது. இது குறித்து பதில் அளித்துள்ள Zomato CEO தீபிந்தர் கோயல், 10 நிமிட டெலிவரிக்கும், ஊழியர்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார். கஸ்டமர் Blinkit-ல் ஆர்டர் செய்ததும், 2.5 நிமிடங்களில் பொருள் பார்சல் செய்யப்படும். ஊழியர்கள் 8 நிமிடத்தில் 2 கி.மீ., (15kmph) சென்றால் போதுமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!