News April 27, 2024
ஏலியன் இருப்பது உறுதியானது?

பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சிவப்புக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தில், உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட 2.6 மடங்கு பெரிதான K2-18b கடல்கள் சூழ அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
‘காந்தா’ கவர்ந்ததா? முழு Review!

ஷூட்டிங்கின் போது துல்கருக்கும் சமுத்திரகனிக்கும் நடக்கும் ஈகோ மோதல் தான் ‘காந்தா’ ✱பிளஸ்: துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்யஸ்ரீ ஆகியோர் மிரட்டியுள்ளனர். கிளைமாக்ஸ் செம ட்விஸ்ட். ஜானு சந்தரின் இசை கச்சிதம். ஒளிப்பதிவு வசீகரிக்கிறது. பல இடங்களில் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கவனிக்க வைக்கிறார் ✱பல்ப்ஸ்: படத்தின் நீளம் சலிப்பு தட்டுகிறது. கொஞ்சம் பொறுமை இருந்தால், ‘காந்தா’ கவரும். Rating 2.5/5.
News November 14, 2025
TN டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவ.26 முதல் டிச.18 வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான TN அணியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாயாஜால சுழற்பந்து வீச்சால் அசத்தி வரும், வருண் சக்ரவர்த்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெகதீசன்,ஷாருக்கான், சாய் கிஷோர், நடராஜன், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
News November 14, 2025
தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


