News March 13, 2025

தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி மறைவு

image

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், தொல்லியல் அறிஞருமான மா.சந்திரமூர்த்தி (80) உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாகையை சேர்ந்த இவர், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவ அடையாளங்களைக் கண்டறிந்துள்ளார். நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் காரணமாக மறைந்த நிலையில், போரூரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News March 14, 2025

லடாக், இமாச்சலில் நிலநடுக்கம்

image

லடாக்கின் கார்கிலில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கார்கிலில் அதிகாலை 2.50 மணிக்கு பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு – காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

News March 14, 2025

18ம் படி ஏறியதும் பகவான் தரிசனம்! இன்று முதல் அமல்

image

சபரிமலையில் பங்குனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இம்மாதம் முதல் தரிசனத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 18ஆம் படியேறியதும் கொடிமரம் வழியாக சென்று நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிப்பதற்கான நேரம் கூடுதலாக கிடைக்கும்.

News March 14, 2025

இன்று பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

image

இன்றைய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம், பழைய பென்சன் திட்டம், EL பணமாக்குதல் போன்ற அறிவிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன?

error: Content is protected !!