News March 16, 2024

அரக்கோணம்: மின்சாரம் தாக்கி பெண் பலி!

image

அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டையை சேர்ந்தவர் ரமீசா(38). இவர் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், இன்று கட்டுமான பணிக்காக தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, மின் கம்பியில் தண்ணீர் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் ரமீசா காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். இருப்பினும் வழியிலேயே ரமீசா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23)நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

News September 23, 2025

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகள் விவசாய நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் காந்தி தரிசனம்

image

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை
ஆர்.காந்தி இன்று திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா,
ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம் பொதுக்குழு உறுப்பினர் PK.பொன்னன்
பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!