News March 17, 2024
அரக்கோணம்: மான் மாமிசம் விற்பனை செய்த 2 பேர் கைது

சோளிங்கர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் ஆர்கே பேட்டை அடுத்த ராஜா நகரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு இரண்டு கிலோ மான் மாமிசம் விற்பனை செய்தார். தகவலின் பேரில் ஆற்காடு வனத்துறையினர் அர்ஜுனன், மதன்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். முன்னதாக சோளிங்கர் வட்டாட்சியர் தேவி முன்பாக இரண்டு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 12, 2026
ராணிப்பேட்டை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.
News February 12, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் இளைஞர்களுக்கு புதிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


