News March 18, 2025
70 கோடி பார்வைகளை கடந்த ‘அரபிக் குத்து’

விஜயின் துள்ளலான நடனம், சிவகார்த்திகேயனின் வரிகள், அனிருத்தின் இசையென அரபிக் குத்து பாடலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பீஸ்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானாலும்,
‘அரபிக் குத்து’ பாடல் இன்றும் ரசிகர்களுக்கு சலிக்கவில்லை. யூடியூபில் மட்டும் இந்த பாடலின் வீடியோ 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Similar News
News March 18, 2025
IPL-2025: குறைந்த சம்பளம் வாங்கும் கேப்டன் இவர்தான்!

IPL-2025 இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், கேப்டன்களின் சம்பளம் குறித்து விவாதம் நடந்து வருகிறது. அதிகபட்ச சம்பளமாக LSG கேப்டன் பண்ட் ₹27Cr, மிகக் குறைந்த சம்பளமாக KKR கேப்டன் ரஹானே ₹1.5Crம் பெறுகின்றனர். பண்டுக்குப் பிறகு ஐயர் (PBKS)₹26.75Cr, கெய்க்வாட் (CSK) ₹18Cr, சஞ்சு (RR) ₹18Cr, கம்மின்ஸ் (SRH) ₹18Cr, அக்சர் (DC) ₹16.50Cr, கில் (GT) ₹16.50Cr, பாண்ட்யா (16.35 Cr), ரஜத் (RCB) ₹11Cr.
News March 18, 2025
Carnivore டயட் இருக்கீங்களா? அப்ப இத படிங்க!

அமெரிக்காவில் காய்கறிகளை தவிர்த்த இளம் பெண்ணுக்கு கிட்னியில் கற்கள் வளர்ந்ததாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். டிக்டாக் பிரபலமான கேத்ரின் carnivore diet என்ற முட்டை, தயிர், சிக்கன், பன்றி இறைச்சி மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். காய்கறி, பழங்கள், தானியங்களை தவிர்த்ததால் பைபர் சத்து குறைந்து கிட்னியில் கற்கள் வளர்ந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மக்களே உஷாரா இருங்க!
News March 18, 2025
தீவிரவாதிகளுக்கு புகலிடம்: குமுறும் பாக்., மக்கள்

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவின் அபு சிந்தி கொல்லப்பட்டது, மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சையதுக்கு குறிவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல யூடியூபர் சுஹெய்ப் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட மக்கள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையத் போன்ற தீவிரவாதிகளுக்கு ஏன் புகலிடம் தர வேண்டும். இந்தியாவை போல் ஏன் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர்.