News September 6, 2025
மொட்டையடித்த AR முருகதாஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெற்றி பெற வேண்டி, அதன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பழனி தண்டாயுதபாணி கோயிலில் மொட்டையடித்துள்ளார். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த அவர், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் இயக்கியுள்ள இப்படம், அவருக்கு கம்பேக்காக அமைந்துள்ளது.
Similar News
News September 6, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? மிரட்டியவர் கைது

மும்பையில் 1 கோடி மக்களை கொல்லும் வகையில் 34 இடங்களில் <<17621243>>வெடிகுண்டு <<>>வைத்துள்ளதாக கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் (50), பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – ஜிகாதி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என கூறி, மும்பை போலீசாருக்கு வாட்ஸ்அப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழும் அஸ்வின் குமார், ஒரு ஜோதிடர் ஆவார்.
News September 6, 2025
திருப்பதியில் 12 மணி நேரம் தரிசனம் ரத்து

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு நாளை மறுநாள் காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதில் அளப்பரிய சந்தோஷம் உள்ளது. நாம் கற்றுக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு, நமது புத்திசாலித்தனத்தை நிரூபிப்பதை காட்டிலும் வேறென்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. அந்த வகையில் வியக்க வைக்கும் சில அறிவியல் உண்மைகளை இங்கு தொகுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.