News April 30, 2025
ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News December 4, 2025
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கு புறப்பட்டு காத்திருக்கும்போது, பஸ் கூட்டமாக வருவதால், மாணவர்கள் காலையிலேயே சற்று சோர்வடைகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் கட்டணமில்லா பஸ் சேவைகள் சென்னையில் அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக கட்டணமில்லா பஸ் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
அதிகம் மது அருந்தும் டாப் 10 நாடுகள்

ஸ்டாடிஸ்டா ஆராய்ச்சித் துறை மற்றும் உலக மக்கள்தொகை மதிப்பாய்வு 2025-ன் படி, அதிக மது அருந்தும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்தியாவின் பெரு நகரங்களில் மது நுகர்வு அதிகரித்து வந்தாலும், டாப் 10-ல் இந்தியா இடம்பெறவில்லை. SHARE.
News December 4, 2025
BREAKING: விஜய் முடிவை மாற்றினார்

புதுச்சேரியில் தவெகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க <<18447638>>போலீசார் மறுத்துவிட்டனர்<<>>. அதேசமயத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வரும் டிச.9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த, தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.


