News April 28, 2025
ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.
Similar News
News September 15, 2025
சென்னையில் சொந்த வீடு இருக்கா?

சென்னையில் செப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கிரெடிட், டெபிட் கார்டு உட்பட அனைத்து வகையிலும் சொத்து வரியை செலுத்த முடியும். க்யூ ஆர் கோடு வாயிலாகவும் மற்றும் What’s App வாயிலாக 9445061913 என்ற எண்ணிலும் செலுத்தலாம். வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்துங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.
News September 15, 2025
தமிழகம் முழுவதும் விலை குறைகிறது

TN வளர்ச்சிக்கான GST சீர்திருத்தங்கள் குறித்த GST 2.O புத்தகத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். டிராக்டருக்கு ₹42,000 வரையும், ₹1 லட்சம் மதிப்பிலான டூவிலருக்கு ₹10,000 வரையும், ஆட்டோக்களுக்கு ₹30,000 வரையும் சேமிக்கலாம். குறிப்பேடுகள் ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ₹850 வரை பெற்றோரால் சேமிக்க முடியும். TV-க்கு ₹4,000, AC-க்கு ₹3,500, ஹீட்டருக்கு ₹7,000 வரையும் விலை குறையும்.
News September 15, 2025
அதிமுகவின் DNA சி.என்.அண்ணாதுரை: EPS

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, ‘அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்’ என EPS தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்ணாவை பெயரில் மட்டுமல்லாமல், கொள்கை, செயல், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக ADMK பெருமையோடு ஏந்தி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலில் ஈடு இணையற்ற தலைமகனின் பிறந்தநாளில் குடும்ப ஆட்சியை அகற்ற உறுதியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.