News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.
Similar News
News November 24, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆய்வு

(74)விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நகராட்சி மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் இன்று (நவ.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 24, 2025
வர்ணிக்க முடியாத கவிதை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் என்றாலே, அவரது கியூட்டான முகபாவனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. வர்ணிக்க முடியாத கவிதை போல் அவரது முகபாவனைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் பட புரமோஷனுக்காக நடத்திய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அனைத்துமே அவரது ஸ்டைலில் ரசிக்கும்படி உள்ளது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 24, 2025
BREAKING: புதிய கட்சி.. OPS அறிவித்தார்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக OPS அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


