News April 20, 2024
ஏப்ரல் 20 வரலாற்றில் இன்று!

➤1534 – யாக்குவஸ் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். ➤1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் ரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர். ➤1939 – ஈழத்து எழுத்தாளர் பிரமீள் பிறந்த நாள். ➤1946 – லீக் ஆஃப் நேஷன் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐ.நா அவைக்கு வழங்கப்பட்டன. ➤1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
Similar News
News August 18, 2025
கை மார்புக்கு வலு சேர்க்கும் சதுரங்க தண்டாசனம்!

✦கைகள், தோள்கள், மார்பு, மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
➥தரையில் குப்புற படுத்து கொள்ளவும். பிறகு இடுப்பை மேலே உயர்த்தி, கைகளில் அழுத்தம் கொடுத்து, கால் & மார்பை தரையில் படும்படி கீழிறக்கவும்.
➥பிறகு, கால் தரையில் இருக்க, மேல் உடம்பை மட்டும் மேலே உயர்த்தவும். இந்த நிலையில் 15- 20 விநாடிகள் இருந்து விட்டு, பிறகு கால்களையும் உடலுக்கு நேராக இருக்கும் படி உயர்த்தவும்.
News August 18, 2025
திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது: அன்புமணி

வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பது தான் தனது ஆசை என அன்புமணி தெரிவித்துள்ளார். பர்கூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 350 சாதிகள் உள்ளன. அதில் எந்தெந்த சாதிகள் இன்னும் முன்னேறவில்லை, யார் எல்லாம் பின்தங்கிய நிலையில் உள்ளனர், கல்வியறிவு முழுமையாக பெற்றிருக்கிறார்களா என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமென்றார்.
News August 18, 2025
தீபாவளி முன்பதிவு… இன்று காலை 8 மணிக்கு ரெடியா..!

தீபாவளி அக். 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, அக்.17-ம் தேதிக்கான டிக்கெட்டை இன்றும், அக்.18-ம் தேதிக்கான டிக்கெட் நாளையும், அக்.29-ம் தேதிக்கு வரும் 20-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெடியா நண்பர்களே!