News April 16, 2024
ஏப்ரல் 16 வரலாற்றில் இன்று!

➤1520 – ஐந்தாம் சார்லஸுக்கு எதிராக ஸ்பானிய கிளர்ச்சி தொடங்கியது. ➤1799 – டாபோர் மலை சமரில் நெப்போலியன் துருக்கியரைத் தோற்கடித்தார். ➤1889 – சார்லி சாப்ளின் பிறந்த நாள். ➤1961 – கியூபாவை பொதுவுடைமை நாடாக பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார். ➤1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் தொடங்கியது. ➤1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது. ➤2013 – விடுதலை வீரர் லகுமையா மறைந்த நாள்.
Similar News
News November 9, 2025
திமுக ஆட்சி Total Failure: EPS

தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருவதாக EPS தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருள்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட திமுக ஆட்சி Total Failure எனவும் EPS சாடியுள்ளார்.
News November 9, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

திருவள்ளுவர் பிறந்த இடம் கன்னியாகுமரி என தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்த பிரபல எழுத்தாளர் எஸ்.பத்மநாபன்(91) காலமானார். வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட அவர், குமரி வரலாற்று மற்றும் கலாசார ஆராய்ச்சி மையத்தின் நிறுவனராகவும் இருந்துள்ளார். பத்மநாபன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 9, 2025
இளவரசர் போல இருந்ததில்லை: செங்கோட்டையன்

உழைப்பவர்களை யாராலும் வீழ்த்தமுடியாது என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். இளவரசர் போன்ற வாழ்கையை என்றும் வாழ்ந்ததில்லை என்ற அவர், எளிமையாக வாழ்ந்ததால் தான் ’நம்ம வீட்டு பிள்ளை’ என எண்ணி மக்கள் தனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனது தியாகங்கள், போராட்டங்கள் குறித்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு தனக்கு பல கடிதங்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.


