News April 14, 2024

ஏப்ரல் 14 வரலாற்றில் இன்று!

image

*1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். *1699 – கால்சா அறப்படை இயக்கத்தை குரு கோவிந்த் சிங் தோற்றுவித்தார். *1891 – பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த நாள். *1912 – வட அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானது. *1950 – ஆன்மிக குரு ரமண மகரிஷி மறைந்த நாள். *2003 – மனித மரபணுத்தொகை ஆராய்ச்சி திட்டம் நிறைவடைந்தது.

Similar News

News October 13, 2025

PF பணத்தை இனி முழுவதுமாக எடுக்கலாம்..!

image

தீபாவளி பரிசாக PF பணத்தை முழுமையாக எடுக்கும் வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, பணியாளர், நிறுவனம் என இரண்டு கணக்கிலிருந்தும் 100% வரை பணம் எடுக்கலாம். கிளெய்ம் பிரிவுகளும் 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், திருமணம், கல்விக்காக வித்டிராயல் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வட்டி பலன்களை பெறும் வகையில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 13, 2025

நகை கடன்.. முக்கிய தகவல்

image

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

News October 13, 2025

6 விநாடி முத்தம் அவசியம்… தம்பதிகளே கவனிங்க

image

‘முத்தம் கொடுப்பதில் கூட நேரம் பார்க்கணுமா’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், அதுவும் முக்கியம் என்கின்றனர் ரிலேஷன்ஷிப் நிபுணர்கள். தம்பதியர் பரிமாறிக் கொள்ளும் முத்தம் 6 விநாடிகள் அளவுக்கு நீடிக்கும் போதுதான், ஆக்சிடோசின், செரோடோனின் போன்ற ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கும் என்கின்றனர். இதனால், தம்பதியர் இடையே பிணைப்பு அதிகரிக்கிறது, பாதுகாப்பு உணர்வும் பலப்படுகிறது. SHARE IT

error: Content is protected !!