News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 30, 2025
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் இவைதான்!

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை The Lowy Institute நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராணுவ திறன், பொருளாதாரம், ராஜதந்திர செல்வாக்கு & நாட்டின் வளம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் முந்திவிட்டது. தற்போது, இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்க.
News November 30, 2025
எங்கே போனார் சந்தானம்?

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த சந்தானம், தற்போது என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. கடைசியாக வெளிவந்த, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அவர் ‘தில்லுக்கு துட்டு’ படத்துக்காக அவர் கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரை சந்தித்து பேசினார் என கூறப்பட்டது. ஆனால், அப்படத்தின் அறிவிப்பும் எதுவும் வெளியாகவில்லை. தோல்வியில் இருந்து விரைவில் மீண்டும் வருவாரா சந்தானம்?
News November 30, 2025
அதிகாரப் பங்கிற்கு வாய்ப்பு இல்லை: விசிக MP

ஒரு வலிமையான கட்சி பலவீனமடையும் போதுதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு வரும் என விசிக MP ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால் திமுக தற்போது வலிமையான கட்சியாக இருப்பதாகவும், அதனால் அதிகாரப் பகிர்வுக்கான வாய்ப்பு இந்த தேர்தலில் இருக்காது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், விசிக தற்போது பலமடங்கு வளர்ந்திருப்பதால் இம்முறை கூடுதல் தொகுதிகளை திமுக கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


