News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
Similar News
News February 25, 2026
₹5000 குறித்து CVS சர்ச்சை பேச்சு.. அமைச்சர் பதிலடி

மகளிருக்கு அரசு வழங்கிய ₹5000 குறித்து சர்ச்சையாக பேசிய<<19224025>> CV சண்முகத்துக்கு<<>> அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார். ₹5000 பணத்தை எதிர்பார்த்து தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது எனக்கூறிய அவர், சி.வி.சண்முகத்தை போன்ற வசதி படைத்தவர்களுக்கு இது தெரியாது என்று விமர்சித்துள்ளார்.
News February 25, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

<<19232033>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சற்று சரிந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹14,930-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹1,19,440-க்கு விற்பனையாகிறது.
News February 25, 2026
பாஜகவிடம் சீட்டு கேட்கும் அதிமுக: சண்முகம்

NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிடம் தொகுதி பங்கீடு குறித்துப் பேசி வருவதாக சொல்வதன் மூலம் அதிமுகவுக்கு பாஜக சீட்டு கொடுக்கும் நிலை உள்ளதாக பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். NDA கூட்டணிக்கு ‘நான் தான் தலைவர்’ என EPS மட்டுமே கூறி வருவதாகவும் கிண்டலடித்துள்ளார். முன்னதாக அமமுக தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவிடம் பேசுவோம் என TTV தினகரன் கூறியிருந்தது அரசியல் களத்தில் பேசு பொருளானது கவனிக்கத்தக்கது.


