News April 1, 2025
ஏப்ரல் 01: வரலாற்றில் இன்று

*1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. *1957 – இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. * இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன. *1976 – ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. *2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது. *முட்டாள்கள் தினம்.
Similar News
News April 2, 2025
‘கடத்தல் நாயகி’யிடம் இருந்து விவாகரத்து கோரும் கணவர்?

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
வக்ஃப் மசோதா: அவையை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்

வக்ஃப் வாரிய மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ஆர்.ராசா உள்ளிட்டோர் முழக்கமிட்டதை அடுத்து, தனது பேச்சை தொடர முடியவில்லை என ரிஜிஜு முறையிட்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
News April 2, 2025
நேரலையில் வருகிறார் நித்தியானந்தா…!

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் நேரலையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை(ஏப்.3) அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசவுள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஜிப்லி டிசைனில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, அனைவரும் காத்திருந்த தருணம் இறுதியாக வந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.