News August 2, 2024
உள்ஒதுக்கீடு தீர்ப்பு: அரசியல் கட்சிகள் மெளனம்

SC/ST இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்கலாமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, முக்கிய கட்சிகள் கருத்து வெளியிடாமல் மெளனம் காக்கின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் பிற கட்சிகள் தரப்பில் கருத்து வெளியிடவில்லை. காங்கிரஸ் எம்பி மல்லு ரவி வரவேற்ற நிலையில், அக்கட்சியின் இன்னொரு எம்பி சுக்தேவ் பகத், தீர்ப்பைப் படித்து பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
Similar News
News November 6, 2025
BREAKING: ரெய்னா, தவானின் ₹11 கோடி சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதன்படி ரெய்னாவுக்கு சொந்தமான ₹6.64 கோடி மியூச்சுவல் ஃபண்ட் நிதியை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஷிகர் தவானுக்கு சொந்தமான ₹4.53 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளையும் ED முடக்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் குறித்து இருவரிடமும் ED விசாரணை நடத்திய நிலையில், தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
News November 6, 2025
இந்த வார OTT விருந்து மெனு இதோ!

வரும் நவம்பர் 7-ம் தேதி, மக்களுக்கு OTT-யில் பெரிய ட்ரீட் தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி, ஆங்கிலம், கொரியன் என பல மொழிப் படங்களும், வெப் சீரிஸும் ரிலீஸாக உள்ளன. அது என்னென்ன படங்கள் என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்யவும். நீங்கள் இதில் எந்த படத்தை முதலில் பாக்க போறீங்க?
News November 6, 2025
WC வெற்றி.. இந்திய அணிக்கு டாடா கொடுத்த கிஃப்ட்

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, டாடா மோட்டார்ஸ் பரிசு அறிவித்துள்ளது. அதன்படி, அணியில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் தலா ஒரு ‘TATA Sierra’ கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது ஐகானிக் மாடலான டாடா சியாராவை, சந்தையில் மீண்டும் டாடா அறிமுகம் செய்கிறது. அதற்கு முன்பாகவே வீராங்கனைகளுக்கு பரிசளிக்கப்படும் இந்த SUV கார்கள், ஸ்பெஷல் பேட்சை சேர்ந்தவை.


