News May 17, 2024
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹83.50ஆக இருந்தது. பிறகு, வர்த்தக நேரத்தில் ₹83.32ஆக மாறியது. முடிவில், ₹83.33ஆக நிலை கொண்டது. அதாவது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்துள்ளது. உள்நாட்டு சந்தைகளில் சாதகமான சூழல், இந்திய சந்தைகளில் வெளிநாடுகளில் இருந்து புதிதாக முதலீடுகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பே காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News November 28, 2025
ராசி பலன்கள் (28.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 28, 2025
13 கிமீ வேகத்தில் நகரும் ‘டிட்வா’ புயல்

<<18403328>> ‘டிட்வா’ புயல்<<>> கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக IMD தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் இந்த புயல் சென்னைக்கு மேற்கு – தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் வருகிற புயல் வருகிற 30-ம் தேதி வட தமிழகம், மேற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் IMD கணித்துள்ளது.
News November 28, 2025
BREAKING: விஜய் கட்சியில் ஓபிஎஸ் இணைகிறாரா?

செங்கோட்டையனைத் தொடர்ந்து OPS-ம் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிச.15 வரை கெடு விதித்துள்ள அவர், தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது திடீர் திருப்பமாக, அவரும் தவெகவில் சேரவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


