News December 19, 2024

ஆளுநர் மாளிகையில் குகேஷுக்கு பாராட்டு விழா

image

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. குகேஷை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, குகேஷுன் வெற்றி இந்திய இளைஞர்களுக்கு புது உத்வேகத்தை அளித்திருப்பதாகவும், விளையாட்டில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக, தமிழக அரசின் சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு, ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Similar News

News July 4, 2025

₹853 கோடி சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி

image

IIT கான்பூரில் பட்டம் பெற்றவர் திரபித் பன்சால். இந்திய வம்சாவளியான இவர், மெட்டா நிறுவனத்தின் AGI பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருடைய ஆண்டு சம்பளத்தைக் கேட்டால் தலையே சுற்றிவிடும். ஆண்டுக்கு ₹853 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதற்கு முன்னதாக பெங்களூரு இந்திய ஆராய்ச்சி நிறுவனம், பேஸ்புக், கூகுள் & மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களிலும் அவர் பயிற்சிப் பணி பெற்றுள்ளார்.

News July 4, 2025

Padman திரைப்பட பாணியில் காங்கிரஸ் பிரச்சாரம்

image

பெண்களுக்கு நாப்கின் அவசியத்தை வலியுறுத்தி Padman எனும் ஹிந்தி படம் உள்ளது. தற்போது அதைப்போன்ற சம்பவம் பீகாரில் நடைபெறுகிறது. அம்மாநில தேர்தலை முன்னிட்டு சானிட்டரி நாப்கின் கொடுக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் துவங்கியுள்ளது. அந்த நாப்கின் கவர்களில் ராகுல், ப்ரியங்கா படங்கள் உள்ளன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுகாதாரத்துடன் இருப்பதை வலியுறுத்தியே இப்பிரச்சாரம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹440 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், சர்வதேச <<16934070>>சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்<<>> காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.

error: Content is protected !!