News November 15, 2024

தவெகவில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்?

image

தவெகவை ஆரம்பித்து விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தி கட்சியை அடுத்த கட்டத்துக்கு விஜய் நகர்த்தி வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தவெகவை தயார்படுத்தும் நோக்கில், கட்சிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தவெகவுக்கு 100 மாவட்ட செயலாளர்கள், 28 சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 27, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 27, ஆவணி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News August 27, 2025

சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடு தேவை: SC

image

சோஷியல் மீடியாவில்(SM) வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு SC அறிவுறுத்தியுள்ளது. SM-ல் பதிவுகள் வணிகமயமாகியதால், மாற்றுதிறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாக கோர்ட் கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக 5 யூடியூபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

News August 27, 2025

அமெரிக்காவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு சலுகை

image

அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!