News August 15, 2024
ஐநாவுக்கான இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தூதராக பதவி வகித்து வந்த ருசிரா காம்போஜ் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்து வந்தது. பி.ஹரிஷ் தற்போது ஜெர்மனிக்கான இந்திய தூதராக பதவி வகித்து வருகிறார். இவர் விரைவில் ஐநாவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்க உள்ளார். இவர், 1990 வருட பேட்ஜை சேர்ந்த IRS அதிகாரி ஆவார்.
Similar News
News December 7, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <
News December 7, 2025
சற்றுமுன் அதிரடி கைது

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
News December 7, 2025
அரசியலில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி?

’சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ என Bigg Boss-ல் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என SM-ல் கேள்வி எழுந்தது. ஆனால், அந்த நோக்கத்தில் அவர் அதை சொல்லவில்லை. சனிக்கிழமை எபிசோடில் VJS-யிடம் BB Contestants பற்றி ஆடியன்ஸ் புகார் வைத்தனர். இதை கேட்ட VJS, ‘ஏதோ தொகுதி மக்களிடம் குறை கேட்டு வந்தது போல் இருப்பதாகவும், சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ எனவும் காமெடியாக சொன்னார்.


