News May 1, 2024
APPLY NOW: நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்கள்

சென்னை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக பணியாளர், ஓட்டுநர் என மொத்தம் 125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 ஆம் தேதி கடைசித் தேதியாகும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ₹500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, SCA பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மேலும் தகவல்களுக்கு <
Similar News
News March 14, 2026
தண்ணீர் கேன் சுத்தமாக இல்லையா? ₹5,000 அபராதம்

TN-ல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் கேன்களின் தரத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கேனிலும் விற்பனை நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு & காலாவதி தேதி, FSSAI உரிமம் எண் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாசி பிடித்த, அசுத்தமான கேன்களில் தண்ணீர் விற்றால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், திமுகவை விட தவெகவுக்கு அதிக வாக்குவங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தவெகவுக்கு 19.20%, திமுகவுக்கு 17.7%, அதிமுகவுக்கு 15.32%, NTK-வுக்கு 6.7% வாக்குவங்கி உள்ளதாம். தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியில் இருந்து 12%, NDA-வில் இருந்து 8%, NTK-ல் இருந்து 2.5% வாக்குகளை பிரித்து தவெக 22.5% வாக்குகளை பெறுமாம். இது 2 பிரதான அணிகளுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
News March 14, 2026
கேஸ் சிலிண்டர்.. பயப்பட வேண்டாம் மக்களே!

தட்டுப்பாடு அச்சம் காரணமாக, நேற்று ஒரேநாளில் 88 லட்சம் பேர் சிலிண்டர் புக் செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேஸ் சிலிண்டர் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், தேவையான அளவு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கவலையை விடுங்க!


