News October 20, 2024

Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாகவுள்ள 26 ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பொறியியல் & மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree, B.E, B.Tech, B.Arch. வயது வரம்பு: 21-35. சம்பளம்: ₹20,000-₹1,00,000. தேர்வு முறை: நேர்காணல். கூடுதல் விவரங்களுக்கு இந்த <>TTDC <<>>லிங்க்கை கிளிக் செய்யவும்.

Similar News

News August 21, 2025

PM மோடி எந்த போன் யூஸ் பண்ணுறார் தெரியுமா?

image

நம்முடைய போனே ரொம்ப Privacy-யானது என்றால், PM மோடி யூஸ் பண்ணும் போன் குறித்து யோசிங்க. Rudra எனப் பெயரிடப்பட்டுள்ள, RAX(Restricted Area Exchange) என்ற போனை அவர் உபயோகிக்கிறார். இந்த போன், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசையில் செயல்படுகிறது. மேலும், எவராலும் ஹேக் பண்ண முடியாத அளவிற்கு சிப் ஒன்றும் போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரிடம் Rudra 2 என்ற இன்னொரு போனும் உள்ளது.

News August 21, 2025

மருத்துவ, ஆயுள் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது

image

GST வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்ய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. GST 2.0-ல் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான வரியை 18% இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் காப்பீடுக்கு வரியாக ரூ.3,600 செலுத்த வேண்டும். இனி 0% வரியாக இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டினால் போதும்.

News August 21, 2025

விஜய்யின் கொள்கை சரியில்லை : சீமான் அட்டாக்

image

விஜய்யின் கொள்கை, கோட்பாடு ஏற்புடையதல்ல என சீமான் விமர்சித்துள்ளார். தவெக மாநாட்டில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்துவிட்டு, திமுகவை எதிரியாக விஜய் குறிப்பிடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த மாநாட்டில் எம்ஜிஆர் படம், அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, EPS படம் வைப்பீர்களா என்றும் அவர் விஜய்யை சாடியுள்ளார். சீமான் கேள்வி குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!