News July 28, 2024
Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

IBPS தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள 6,128 (தமிழ்நாட்டில் 665 இடங்கள்) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. CRP Clerk XIV எழுத்தர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree, கணினியை இயக்கும் அறிவு, ஆங்கில மொழியறிவு. வயது வரம்பு: 20-28. ஊதியம்: ₹28,000/-. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News December 4, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.
News December 4, 2025
அதிபர் புடின் இன்று இந்தியா வருகை

அரசு முறைப் பயணமாக அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார். புடினின் இந்த பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான <<18461190>>வர்த்தகம், பொருளாதாரம்<<>> குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதையடுத்து, டிச.5-ல் நடக்கும் 23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் PM மோடி, புடின் பங்கேற்கின்றனர். முன்னதாக, PM மோடி புடினுக்கு சிறப்பு விருந்தளிக்கவுள்ளார். புடின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News December 4, 2025
எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறதா?

தூக்கமின்மை, முறையற்ற உணவு, மன அழுத்தம் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுகின்றன. குறிப்பாக நாள் முழுவதும் உடல் சோர்வு, பலருக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. உடல் சோர்வில் இருந்து விடுபட, சத்தான உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அதன்படி, என்னென்ன சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


