News May 20, 2024
APPLY NOW: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் <
Similar News
News March 4, 2026
திருச்சி ரயில்வேயில் இந்தி பெயரை அகற்ற ஒப்புதல்

திருச்சி ரயில்வே நுழைவாயிலில் இந்தி பெயர் இடம்பெற்றதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில்வே அலுவலகம் முன் திமுகவினர் போராட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டில் உள்ள இந்தி பெயர் உடனடியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
News March 4, 2026
ரேஷன் கார்டுதாரர்களுக்கு.. விஜய் வாக்குறுதி

ரேஷன் அட்டைதாரர்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார். இதன்படி, 500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை, ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பெண்களுக்கு பெண் எடையாளர், ஆண்களுக்கு ஆண் எடையாளர் என நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்களை இலக்காக கொண்ட இந்த வாக்குறுதி பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 4, 2026
தேமுதிக, நாதகவுக்கு சின்னம் ஒதுக்கியது ECI

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து ECI அறிவித்துள்ளது. தேமுதிகவின் கோரிக்கையை ஏற்றே இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. இத்தேர்தலில் தேமுதிக குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல், நாதகவுக்கு இரு மாநிலங்களிலும் விவசாயி சின்னம் ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது.


