News April 30, 2024
Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்திய கடற்படையில் நிரப்பப்படவுள்ள 4,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Sea Man, Deck Rating, & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: ₹55,000/-. கூடுதல் தகவல்களுக்கு https://admission.sealanemaritime.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்க்கவும்.
Similar News
News August 15, 2025
அதிமுகவில் துரைமுருகன் இருந்திருந்தால்.. EPS பேச்சு

எந்தவித போராட்டங்களிலும் கலந்துகொள்ளாமல் நேரடியாக அரசியலுக்கு வந்த உதயநிதி, இன்று DCM-ஆக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், துரைமுருகனும் மிசாவில் இருந்தவர்தான், அவருக்கு ஏன் உயர் பொறுப்பு கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ஆனால், துரைமுருகன் அதிமுகவில் இருந்திருந்தால் அவர் இருக்கும் இடமே வேறு என்றும் அவர் கூறினார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
News August 15, 2025
மகளிர் உரிமைத்தொகை 24-வது தவணை வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
News August 15, 2025
எதிரிகளை மிரள வைக்கும் ‘சுதர்ஷன் சக்ரா மிஷன்’

மோடி அறிவித்த <<17410827>>‘சுதர்ஷன் சக்ரா மிஷன்<<>>’ நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்குமாம். இந்தியாவின் தேவைக்கேற்ற பாதுகாப்பு, நவீன கண்காணிப்பு, துல்லியமான தற்காப்பு உள்ளிட்டவை இதில் திட்டத்தில் உள்ளாக்கப்படுமாம். இஸ்ரேலின் அயர்ன் டோமை விட அதிநவீன அம்சங்களை உள்ளடங்கி உள்நாட்டிலேயே இத்திட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிரிகள் இந்தியாவை நெருங்க கனவில் கூட எண்ணக்கூடாது, என்பதே இதன் நோக்கமாம்.